Monday, September 14, 2009

அற்றது பற்றெனின்...

உறுப்புகளற்று
அம்மனமாய்
விழுந்துகிடந்தேன்
உன் மனப்புழுதியில்
அடையாளங்கள் ஏதுமற்று

பின் மண்டை
பிளந்து
மூளை அடுக்குகளுக்குள்
செருகிய நினைவுகளில்
”என் பெயர்
இல்லை”,
தூர எறி!

மயிர் முளைக்கும்
சத்தம்
மனம் அரற்றும்
ஒலி
செவிகள் தேவையில்லை
திருகிக் களை!

கோரைப்பல்
கொடும்பகை
குடல் கிழிக்கும்
குறுஞ்சிரிப்பு
ஆக மொத்தம் காணும்
கண்களை பிடுங்கு!

இலக்கியம்
தத்துவம்
இஸங்கள் ஏதுமின்றி
இயன்றவரை உண்மை
வாய்பூட்டு!
சாவி தொலை!

விந்து நிறைந்து
கனத்து தொங்கும்
விரைப்பை
கழற்றி வை!

யோனி உட்புக
உன் குறியை
மட்டும் விட்டு வை!

No comments:

Post a Comment