Wednesday, September 9, 2009

பாசுரங்கள் - ஒரு புதுக்கவிதை முயற்சி....

(தமிழ் கூறும் நல்லுலகம் என்னை வைகுண்டம் ஏக சபிக்காதிருக்கட்டும்...)





சிறு கத்தி
கொண்டு
உடலின் குறுக்காய் கிழித்து
சுட்டும்
சொஸ்தபடுத்தும்
ஒரு தேர்ந்த
அறுவை சிகிச்சையாளனாய்...
உன் மாயங்கள்,
தந்திரங்கள்,
துன்புறுத்தும்...
இருந்தும் கூட
முன்னவனை போல்
உன்னை
நேசிக்கிறேன்....
------------------------------------------பெரியாழ்வார்
(2)
மண்ணை
தோண்டி மண்ணில்
துழாவி
வாமனன் மண் இது
என்று பிதற்றும்

வானத்தைப்
பார்த்து
கைதூக்கி
வைகுண்டம் அதுவென்று
உளறும்

கண்ணில்
நீர் வழிய
கடல் பார்த்து
கண்ணன் என்று
கதறி
அவனை அழைக்கும்
என் மகளை
பித்தம் பிடிக்கச் செய்தவனை
என்ன செய்வது

---------------------------------------- நம்மாழ்வார்.





(3)
நடக்கும்போது
குடை
உட்கார
இருக்கை
நின்றால்
செருப்பு
படுக்கையில்
தெப்பம்
இரவில்
சிறு வெளிச்சம்
போர்வையும்
தலையணையும்
உறங்குகையில்

திருமாலுக்கு
பாம்பு…..

----------------------------------------பொய்கையாழ்வார்

No comments:

Post a Comment