என்னை
கொளுத்தி கொள்வதாய்
முடிவு செய்தேன்
உடையில்
தான் முதலில்
பற்ற வைத்தேன்
பற்றி படர வசதியாய்
லுங்கி அணிந்திருந்தேன்
கெண்டைக்கால், ஆடுசதை
தொடையின்
கொழுப்பு ஆகுதியில்
நெய் வார்த்தது...
மெதுவாய்
வளர்ந்து மேலேறியது
புற உடல் தின்று
உட்புகுந்து
உள்ளும் படர்ந்தது
கேசம் எரிவதில்
குடலை பிடுங்கும்
நாற்றம் எடுத்ததாக
அயலார் கூறக்கூடும்
பற்றிஎரிந்ததில்
முதலில்
நிர்வாணம் அழிந்தது
ஆதிமரணம்
தன் கிரணங்களை
பாய்ச்சி உயிரை
வெளுக்க செய்தது
நான் நானற்று
கரிகட்டையாய் கிடக்கிறேன்
(இந்த கவிதை உயிரோசை மின் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன்)
தாம்பத்தியம்
9 years ago
No comments:
Post a Comment