Wednesday, August 19, 2009

மொட்டபாற முனீஸ்வரன்....மல்லாங்கிணறு


மொட்டப்பாற முனீஸ்வரனுக்கு
நேர்ந்து விட்ட
வெள்ளாட்டங்குட்டி
காணாமப் போனதில்
பதறிப் போனா ஆத்தா…

சாமிகுத்தம் சடக்குன்னு தீர
ஈஸ்வரியம்மா சொல்ல
குறி கேட்ட உள்ளூர் கோடங்கியும்

சாவலும் சாராயமும்
படையலுக்கு வைச்சா..
கருப்பு காட்டிக் கொடுப்பான்னு…

கோடங்கி மேல
ஏறி வந்த கருப்பும்
மனசெறங்கி
ஏலாம் நாள்ல
வாசக்கால் வரும்னு….

வாரம் கடந்து போச்சு…

மய்க்கா நாளே
மிளகியும் வந்து நின்னா…
வாசலிலே
அத்த! அம்மா கறிக்குழம்பு
குடுத்தாகன்னு….

1 comment:

☼ வெயிலான் said...

பல விசயங்களைச் சொல்லும் நல்ல கவிதை ராகவன்.

மல்லாங்கிணறு பெயர் பார்த்து வந்தேன் :)

Post a Comment