இரவு தின்று
மிச்சமான
விளக்கு வெளிச்சம்
போதுமானதாய்
இருக்கிறது...
நீ படுத்திருக்கும்
திசையில் வாகாய்
காலை நீட்டி
உன் கொலுசை
கிளுக்கி எழுப்ப
கொஞ்சம்
சுவரதெரிப்பில்
புரண்டு படுக்கிறாய்
உன் கனவின்
துளையில் நுழைவதற்கு
தோதாய்
கைகளை மட்டும்
அனுப்பி
உன் உடம்பில்
பரத்தியிருக்கும்
வெப்ப பூக்களை
பறிக்கிறேன்
சில அமிலத்துளிகள்
தரையில் சிந்தி
கொப்பளிக்கிறது
மேசைக்காற்றாடி
மகுடிக்க
ஆடிய முடிக்கற்றைகள்
கருத்த நாகங்களுக்கு
ஒப்பாய்
உடலெங்கும் தீண்டி
உயிர் ஒழுக
பொத்தலாக்குகிறது
ஒவ்வொரு
பொத்தல்களில் இருந்தும்
வடிந்த உயிர்த்துளிகளில்
மிதந்து கரையேருகிறது
இரண்டு
புகைக்ச்சிற்பங்களுடன்
ஒரு
பெயரறியாப்படகு
தாம்பத்தியம்
9 years ago
6 comments:
///ஒவ்வொரு
பொத்தல்களில் இருந்தும்
வடிந்த உயிர்த்துளிகளில்
மிதந்து கரையேருகிறது
இரண்டு
புகைக்ச்சிற்பங்களுடன்
ஒரு
பெயரறியாப்படகு///
அருமை அருமை
//கொஞ்சம்
சுவரதெரிப்பில்
புரண்டு படுக்கிறாய்
உன் கனவின்
துளையில் நுழைவதற்கு
தோதாய்//
//ஒவ்வொரு
பொத்தல்களில் இருந்தும்
வடிந்த உயிர்த்துளிகளில்
மிதந்து கரையேருகிறது
இரண்டு
புகைக்ச்சிற்பங்களுடன்
ஒரு
பெயரறியாப்படகு//
கலக்கல் கவிதை..!!
அடடா கவிதை சும்மா கலக்கு கலக்குன்னு கலக்குது....உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ரொம்ப நல்லா இருக்கு ராகவன் உங்களின் பின்னுட்டங்கள் போலவே..!!
ரொம்ப நல்லா இருக்கு!
--
http://www.vijayashankar.in
அருமையா எழுதியிருக்கீங்க
Post a Comment